வாலிபர் ஒருவரைக் கடத்தி வந்து கடுமையாகத் தாக்கி, உயிருடன் எரித்த கொடூர சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட, ஹுலுதாகொட பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கடத்தி வரப்பட்டு, கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய எரிந்த நிலையில், அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
