மட்டக்களப்பு (Batticaloa) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் அம்பவத்தை
பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி; ரக குண்டு
ஒன்று உட்பட இரு குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள்
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த இரு பிரதேசங்களின்
காட்டை அண்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு குண்டுகள் இருப்பதைக் கண்டு
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் இரு குண்டுகளையும் மீட்டுள்ளனர்
இவ்வாறு மீட்டகப்பட்ட குண்டுகளை நீதிமன்ற அனுமதியை பெற்று செயலிழக்க செய்யும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
