Home இலங்கை அரசியல் சட்ட மா அதிபரின் அறிக்கையை புரிந்து கொள்ளாது கருத்து வெளியிடக் கூடாது

சட்ட மா அதிபரின் அறிக்கையை புரிந்து கொள்ளாது கருத்து வெளியிடக் கூடாது

0

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்படுவதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் அறிக்கையை சரியாக ஆராயாது சிலர் கருத்துக்களை வெளியிட்டு சட்டத்தரணி என்ற ரீதியில் குறிப்பிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

விசாரணை நடவடிக்கைகள் 

சட்ட மா அதிபரின் அறிக்கையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் வசந்த விக்ரமத்துங்க படுகொலை சம்பவம் குறித்த விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணை அறிக்கையை முழுமையாக புரிந்து கொள்ளாத சிலர் சமூக ஊடகங்களில் வெளியாகும் தலைப்புகளின் அடிப்படையில் கருத்து வெளியிடுவதாகவும் இது விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்த கூடும் எனவும் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக இயங்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் முன்வைக்கும் காரணிகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version