Home இலங்கை சமூகம் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

0

எல்ல நானுஓயா ஓ.டி.சி. தொடருந்தில் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பதுளை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த ஓ.டி.சி. தொடருந்தில்
ஹாலிஎலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்படி நபர் மோதி
உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மேற்படி நபர் யார் என்று அடையாளம்
காணப்படவில்லை.

40 வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version