Home இலங்கை சமூகம் காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

0

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸார் முக்கிய தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நாளைய தினம் காதலர் தினம் கொண்டாட தயாராகும் நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை பற்றி இருமுறை சிந்தியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலர் தினம்

மேலும், காதலர் தினத்திற்கு முன்பு நீங்கள் ஒரு பெண் பிள்ளையாக இருந்தால், காதலர் தினத்தைக் கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்பு உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை பற்றி இருமுறை சிந்தியுங்கள்” என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் 109 என்ற அவசர எண்ணை அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version