Home இலங்கை சமூகம் தென்னிலங்கையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதிகள்: ஏழு பெண்கள் கைது

தென்னிலங்கையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதிகள்: ஏழு பெண்கள் கைது

0

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை (Kadawatha), எல்தெனிய (Eldeniya) பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இன்னொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட பெண்கள் ஹகுரன்கெத்த, குருநாகல், ஹக்மன, திஸ்ஸமஹாராமய, எம்பிலிப்பிட்டிய, கொட்டாவ மற்றும் வேயங்கொட ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவர்கள் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version