பிபில நாகல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சுமார் 47 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தானது இன்று (05) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து
பிபிலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், பின்னால் அதே திசையில் சென்ற அரச பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 47 பேர் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது .
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
