Home முக்கியச் செய்திகள் பிரதான வீதியில் போட்டிபோட்டு ஓடிய இரண்டு கார்கள் காவல்துறை வசம்

பிரதான வீதியில் போட்டிபோட்டு ஓடிய இரண்டு கார்கள் காவல்துறை வசம்

0

பிரதான வீதியில் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டிச் செல்லப்பட்ட இரண்டு கார்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம காவல் பிரிவுக்குட்பட்ட கலவிலவத்தையிலிருந்து மகும்புர நோக்கி இரண்டு கார்கள் அதிவேகமாக இயக்கப்பட்டன, இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

காணொளியை அடுத்து காவல்துறை எடுத்த நடவடிக்கை

இந்த காணொளியின் மீது கவனம் செலுத்தப்பட்ட பின்னர் விசாரணைகளைத் தொடங்கியதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு கார்களும் நேற்று (25) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

சம்பவத்தில் தொடர்புடைய கார்களின் ஓட்டுநர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version