பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த வாரம் நான்கு புது வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில் ஷோ சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
மேலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஹோட்டல் டாஸ்க் மற்றும் அதில் சில போட்டியாளர்களுக்கு மட்டும் ரகசிய டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் ஷோவை சுவாரஸ்யம் ஆக்க நிகழ்ச்சி டீம் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
டபுள் எலிமினேஷன்
இந்நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கூறப்பட்ட நிலையில் அது யார் யார் என்கிற உறுதியான தகவல் வந்திருக்கிறது.
துஷார் மற்றும் பிரவீன்ராஜ் தான் எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.
முதலில் வேறொரு போட்டியாளர் தான் வெளியேற்றப்பட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரவீன் ராஜ் தேர்வு செய்யப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டதாக தெரிகிறது.
