Home இலங்கை குற்றம் மித்தெனிய பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு

மித்தெனிய பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு

0

 மித்தெனிய பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இரண்டு பேரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு இளைஞர்களது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மித்தெனிய தோராகொலயாய என்னும் இடத்தில் இந்த இரண்ட சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுடையவர்களாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு சடலங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மித்தெனிய பொலிஸாரும் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களும் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version