Home இலங்கை சமூகம் ஆலயத்திற்கு தாமரை இலை பறிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி

ஆலயத்திற்கு தாமரை இலை பறிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி

0

Courtesy: Shanmugam Thavaseelan

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவில்
பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிக்க தாமரை குளத்தில் இறங்கிய
இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 

வைத்தியசாலையில் அனுமதி  

இன்று (01.06.2025) மதியம் 11:30 மணியளவில் குளத்தில் இறங்கி இருவரும் நீரில் மூழ்கிய
நிலையில் கிராம மக்களின் முயற்சியின் பயனாக இருவரும் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக
வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளனர். 

அளம்பில் தாமரை குளத்தில் தாமரை இலை பறிக்க சென்ற அளம்பில் வடக்கை சேர்ந்த 25
வயதுடைய இராஜசேகர் நிசாந்தன் மற்றும் பத்து வயதுடைய சிவநேசன் பிரணவன் ஆகிய
இருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இவர்களின் உடலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version