Home இலங்கை சமூகம் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரித்தானிய மற்றும் இத்தாலிய பிரஜைகள்!

அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரித்தானிய மற்றும் இத்தாலிய பிரஜைகள்!

0

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய பிரஜை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி (Kandy) சுற்றுலா காவல்துறை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கண்டி புவேலிக்கடை பகுதியில் வைத்து குறித்த வெளிநாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த மாதம் 27 ஆம் திகதி குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதி ஒன்றை கண்டி சுற்றுலா காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/two-foreigners-arrest-for-violating-visa-condition-1730708718

NO COMMENTS

Exit mobile version