Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

தமிழர் பகுதியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

0

ஏ 35 பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (18.11.20224) ஏ 35 பிரதான வீதி – தர்மபுரம் (Dharumapuram ) காவல்நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சி வைத்தியசாலை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த,

மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர காவல்நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/two-injured-in-road-accident-in-a9-road-1731920623

NO COMMENTS

Exit mobile version