காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், தற்போது இரண்டு இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடலை மீட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் ஒருவர் 56 வயதுடைய இலான் வெயிஸ்(Ilan Weiss) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிணைக்கைதி
அதே சமயம் மீட்கப்பட்ட இரண்டாவது பிணைக்கைதியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் போது கடத்தப்பட்டனர்.
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிணைக்கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இன்னும் 48 பிணைக் கைதிகள் ஹமாஸ் வசமிடம் இருப்பதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாகவும் இஸ்ரேல் நம்பிக்கை தெரிவித்து வருகிறது.