Home இலங்கை சமூகம் மியன்மார் அகதிகளில் இருவர் மருத்துவமனையில் அனுமதி!

மியன்மார் அகதிகளில் இருவர் மருத்துவமனையில் அனுமதி!

0

முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு
மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர்
உடல் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று (09.01.2025) அதிகாலை வேளை குறித்த அகதிகளில் இருவருக்கு வயிற்றுவலி காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

33 அகவையுடைய பெண் ஒருவரும் 12 அகவையுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version