Home இலங்கை கல்வி சாதாரண தரப் பரீட்சைக்குச் சென்ற இரு மாணவிகள் மாயம்

சாதாரண தரப் பரீட்சைக்குச் சென்ற இரு மாணவிகள் மாயம்

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு (GCE O/L) எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை மஹியங்கனை (Mahiyangana) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளர்.

காவல்துறையினர் விசாரணை

அவர்கள் 26 ஆம் திகதி பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறினர்.

தேர்வு எழுதச் சென்றிருந்த இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் மஹியங்கனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/ynaVTH-3Ba4

NO COMMENTS

Exit mobile version