Home இலங்கை சமூகம் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி இருவர் பரிதாப மரணம்!

மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி இருவர் பரிதாப மரணம்!

0

அம்பாந்தோட்டை- வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (7) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில்
வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version