பதுளை (Badulla) – ஹாலிஎல பிரதேசத்தில் இருவேறு இடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலங்கள் இன்றைய தினம் (12.03.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
ஹாலிஎல நகரில் உள்ள முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள வீதியில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்றொன்று ஹாலிஎல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் ஹாலிஎல காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இளைஞர்களின் சடலங்கள், தொலைதூரப் பகுதியில் கொலை செய்யப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டதா? அல்லது இங்கு கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
