Home முக்கியச் செய்திகள் கொலை பட்டியலுக்குள் சஜித் அணி எம்பி! எடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை

கொலை பட்டியலுக்குள் சஜித் அணி எம்பி! எடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை

0

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொலை திட்டம்

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஜகத் விதான நாடாளுமன்றுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்போது, வீட்டிலிருந்து வெளியே வரும் போது, தன்னைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே அவரின் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version