Home முக்கியச் செய்திகள் தப்பியோட முயன்ற கைதிகள் : பின்னர் நடந்த விபரீதம்

தப்பியோட முயன்ற கைதிகள் : பின்னர் நடந்த விபரீதம்

0

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பியோட முயற்சித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டால் பயந்துபோன கைதிகள் தப்பிக்கும் முயற்சியைக் கைவிட்டு சிறை வளாகத்திற்குத் திரும்பியதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

தப்பிச் செல்ல முயன்றபோது சிறைச்சாலை சுவரில் இருந்து விழுந்ததில் இரண்டு கைதிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.     

                       

NO COMMENTS

Exit mobile version