Home இலங்கை சமூகம் மோடியின் இலங்கை பயணம்: நல்லிணக்க அடிப்படையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் விடுதலை

மோடியின் இலங்கை பயணம்: நல்லிணக்க அடிப்படையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் விடுதலை

0

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து கடந்த மாதம் 15ஆம் திகதி கடற்றொழிலுக்கு புறப்பட்டு எஞ்சின் பழுது காரணமாக கடந்த 20ஆம் திகதி கரை ஒதுங்கிய இரு கடற்றொழிலாளர்களை எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்கு இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். 

நல்லிணக்க அடிப்படை

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரசு முறை பயணமாக
செய்துள்ள நிலையில் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 11 பேர் இலங்கை அரசால் நல்லிணக்க
அடிப்படையல் விடுதலை செய்யப்பட்டனர்.

 

அதற்கமைய, புழல் சிறையில் இருந்த யாழ்ப்பாணத்தை
சேர்ந்த இரண்டு இலங்கை கடற்றொழிலாளர்களை இந்திய அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை
செய்து உத்தரவிட்டது.

இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விமான மூலம் யாழ்ப்பாணம் வருவார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version