Home இலங்கை சமூகம் மாலைத்தீவிடம் சிக்கிய இரு இலங்கை மீன்பிடி படகுகள்

மாலைத்தீவிடம் சிக்கிய இரு இலங்கை மீன்பிடி படகுகள்

0

மாலைத்தீவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) நுழைந்ததாகக் கூறி இரண்டு
இலங்கை மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உளவுத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில்,
கேலாவிலிருந்து 51 கடல் மைல் தொலைவில், இந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

பின்னர் அவை மாலைத்தீவு பொலிஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை
தொடங்கப்பட்டுள்ளது.

தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

கடந்த மாதம் 350 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் இலங்கை மீன்பிடி படகு
கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தின் போது எத்தனை கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் இதுவரை
வெளியாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version