Home இலங்கை குற்றம் வெளிநாடொன்றில் இரண்டு இலங்கையர்கள் கைது

வெளிநாடொன்றில் இரண்டு இலங்கையர்கள் கைது

0

கொசோவோவில்(kosovo) மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜிலானின் பெர்லெப்னிகே கிராமத்தில் இலங்கையர்கள் கைது
செய்யப்பட்டதாக கொசோவோ காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்குவதற்கான அனுமதி 

இந்த இருவரும் வாகனத்தில் செர்பியாவிலிருந்து கொசோவோ குடியரசில் நுழைந்ததாக
கொசோவோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வாகனம் செர்பியாவைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கையர்கள், கொசோவோ குடியரசில் இரண்டு
வாரங்கள் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version