களுத்துறை (Kalutara), பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் இருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (24.08.2025) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.
நீரில் மூழ்கி காணாமல் போன இருவரும் பாணந்துறை, எலுவில மற்றும் ஹொரணை, கல்பத்த ஆகிய இடங்களைச் சேர்ந்த மிஹின் சன்ஹிந்த மற்றும் நெதும் நெத்சார என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
