Home இலங்கை சமூகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு வெதுப்பகங்களிற்கு அபராதம்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு வெதுப்பகங்களிற்கு அபராதம்

0

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் மீது சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் 12.06.2024 ம் திகதி நல்லூர் சகாதார வைத்திய அதிகாரி,
மேற்பார்வையின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கொக்குவில் பகுதியில்
அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன.

பின்னர் குறித்த வெதுப்பகங்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால்
வழக்குகள் கடந்த 24.06.2024 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.

தலா 80,000/= அபராதம்

வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகங்களை மூடி சீல்வைக்குமாறும், மற்றைய
வெதுப்பகத்தை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கினார்.

குறித்த
வெதுப்பகம் பா.சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது. அத்துடன் வழக்கினை நேற்று
தினத்திற்கு 03.07.2024 ஒத்திவைத்தார்.

இதனையடுத்து வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ.
லெனின்குமார் இரு பேக்கரி உரிமையாளர்களிற்கும் தலா 80,000/= அபராதம்
அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார
பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் பேக்கரிகளை தொடர்ந்து இயங்க
அனுமதி வழங்கினார்.

NO COMMENTS

Exit mobile version