ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.
10 ஈரானிய ஏவுகணைகள்
ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் போது ஜோர்டான் வான்பரப்பில் நுழைந்த 10 ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் இராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையில், அல்-அஸ்ராக் (Al-Azraq) தளத்திலிருந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ளது.
Source: https://tamilwin.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784403160
