நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த துயர நேற்று (20) காலை வேளையில், அரலகங்வில காவல்துறை பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தேகம, தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையாகும்.
மேலதிக விசாரணை
சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
