தமன்னா
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா.
அப்படத்தை தொடர்ந்து கல்லூரி படத்தில் நடித்தவருக்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன்பின் ரசிகர்களால் கவனிக்கப்படும் நாயகியாக மாறிய தமன்னா, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இப்போது அவர் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹிந்தி படங்களில் ஒரேஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடும் தமன்னாவின் வீடியோ ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வந்தது.
சொத்து மதிப்பு
தமன்னா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அவரிடம் மொத்தம் ரூ. 130 கோடி சொத்து மதிப்பு இருக்கிறதாம். கடற்கரை பகுதியில் அப்பார்ட்மெண்ட்டில் வீட்டை தவிர்த்து தமன்னா 3 வீடுகளையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
இதுதவிர ரூ. 43 லட்சம் மதிப்புள்ள BMW 320i, ரூ. 1 கோடி மதிப்புள்ள Benz GLE, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பஜேரோ, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளாராம்.
