Home முக்கியச் செய்திகள் யாழில் வாளுடன் இருவர் கைது – புலனாய்வு பிரிவினருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சி

யாழில் வாளுடன் இருவர் கைது – புலனாய்வு பிரிவினருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் 20g ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 25 மற்றும் 23 வயது சேர்ந்த குறித்த நபர்கள் கைதான சமயம் குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை

இதேநேரம் குறித்த இருவருள் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர்
என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இன்நிலையில் மேலதிக விசாரணைகள் யாழ் மாவட்ட காவல் நிலையத்தின் குற்றத்தடுப்பு
பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version