Home இலங்கை சமூகம் வீதி விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள்: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

வீதி விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள்: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

0

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுள்ளார்.

குறித்த  விபத்து சம்பவம் நேற்று(06.01.2024) இடமமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

நேருக்கு நேர் மோதி விபத்து

வவுனியாவிலிருந்து – கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் மோட்டார்
சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ம் கட்டைப் பகுதியைச்
சேர்ந்தவரென பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்,  விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version