Home இலங்கை சமூகம் கண்டியில் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த ஐக்கிய அரபு இராச்சிய குழு

கண்டியில் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த ஐக்கிய அரபு இராச்சிய குழு

0

சூறாவளி மற்றும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு இலங்கையை ஆதரிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீர் மீட்புப் பிரிவுகள், K9 குழுக்கள், மீட்புப் படகுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய அவர்கள், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியம்

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) வான் படையின் C-17 விமானம், நேற்று முன்தினம் (02 ) அனர்த்த நிவாரண மனிதாபிமான உதவிப் பொருட்களின் ஒரு தொகுதியுடன் இலங்கையை வந்தடைந்தது.

கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து மனிதாபிமான உதவிகளுடனான நான்காவது விமானம் நேற்று முன்தினம் (3) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்குச் சொந்தமான C-17A விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த உதவிப் பொருட்களை, இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் சஷீந்ர விஜேசிறிவர்தன உத்தியோபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான தேடுதல் பணி,மீட்புப்பணி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கிலான உணவு, நிவாரணப் பொதிகள் மற்றும் மீட்பு வாகனங்கள் ஆகியவை இந்த உதவிப் பொருட்களில் அடங்கும்.

இந்த கடினமான சமயத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உடனடி உதவிகளுக்கு இலங்கை நன்றியுடன் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version