Home இலங்கை அரசியல் யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம்

யாழில் வாய்த்தர்க்கத்தின் பின் தவிசாளருக்கு கிடைத்த ஆசனம்

0

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷிற்கு வாய்த்தர்க்கத்தின் பின் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் அமர ஆசனம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (16.09.2025) செவ்வாய்க்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உடுவில்
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று உதவிப் பிரதேச செயலாளர்
தலைமையில் ஆரம்பமானது.

தெற்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்று

இதன் போது கூட்டத்திற்கு வருகை தந்த உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ்
தெற்கில் இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அந்த
பகுதியின் தவிசாளருக்கு மேல் இருக்கையில் ஆசனம் வழங்கப்படுகிறது.

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டம் தெற்கிற்கு ஒன்று
வடக்கிற்கு ஒன்றாக இருக்க முடியாது எனக்கு உரிய ஆசனம் வேண்டும் என்றார்.

இதன்போது பதில் வழங்கிய அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்
பவானந்தராஜா இங்கு எந்த அரசியலும் இல்லை அபிவிருத்தி தான் உங்கள் கோரிக்கையை
ஏற்கிறேன் வாருங்கள் என்றார்.

கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தவிசாளர் எழுந்து சென்று அபிவிருத்தி குழு
தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்த ராஜாவுக்கு கை கொடுத்து மேல் இருக்கையில்
அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version