Home உலகம் பிரித்தானியாவில் குடும்ப விசா பெற காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவில் குடும்ப விசா பெற காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

0

பிரிட்டனில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் சேர்த்து வாழ அழைக்க விரும்பினால், அவர்களது ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான விதிகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

முந்தைய கன்சர்வேட்டிவ் அரசின் கீழ், இந்த வருமான வரம்பு £29,000 ஆக நிர்ணயிக்கப்பட்டதுடன், அதை £38,700 ஆக உயர்த்தும் திட்டமும் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய லேபர் அரசு, இந்த விதிகளை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டது.

புதிய வருவாய் அளவு

அதன் அடிப்படையில், புலம்பெயர்தல் ஆலோசனை குழு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்தினரை அழைக்கும் விண்ணப்பதாரர்களுக்கான ஆண்டு வருவாய் அளவு £23,000 முதல் £25,000 வரை இருக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், பலர் குடும்பத்துடன் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version