பிரித்தானியாவில் (Britain) சிறையிலிருக்கும் கொடூரமான குற்றவாளிகளை ஸ்டார்மர் அரசாங்கம் விடுதலை செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்நாட்டில் சிறைகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பேராபத்தைத் தவிர்க்கவும் இந்த தீர்மானத்தை லேபர் அராசங்கம் எடுத்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
ரிஷி சுனக்கின் அரசாங்கம்
இதன் படி, குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதுடன், அவர்களை கண்காணிக்கும் பொருட்டு, உரிய அதிகாரிகளை புதிதாக பணிக்கு அமர்த்தவும் திட்டமிருப்பதாக பிரித்தானிய நீதித்துறை செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) அரசாங்கத்தை கடுமையாக ஷபானா மஹ்மூத் விமர்சித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குற்றவாளிகள் விடுதலை
அதன் போது, ரிசி சுனக்கின் அரசாங்கம் மொத்தமாக ஸ்தம்பித்துப் போகும் நிலையில் இருந்து சிறைகளை மீட்க தவறிவிட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானிய பிரமராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஸ்டார்மர் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.