Home உலகம் கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: பிரித்தானியாவில் வெடித்த பாரிய போராட்டம்

கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: பிரித்தானியாவில் வெடித்த பாரிய போராட்டம்

0

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் பிரித்தானியாவில் (United Kingdom) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று (30) மாலை மூன்று மணி தொடக்கம் ஐந்து மணி வரை பிரித்தானிய பிரதம பணிமனையின் முன்னால் இடம்பெற்றுள்ளது.

மேற்படி போராட்டமானது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்
நிறுத்த இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள்

சர்வதேச நீதியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வொல்கர் டார்க்கின் கவனத்தையும் மற்றும் வேறு சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட தமிழீழ உறவுகளும் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version