பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்வொன்றுக்காக இலங்கை சென்ற பிரித்தானிய வாழ் 61 வயதான ஐரி பெரேரா என்ற பெண் மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கம்பளையில் தனக்கு சொந்தமான வீட்டில், வெள்ளத்தினால் வீடிழந்த 25 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறார்.
பிரித்தானிய பெண்ணின் செயல்
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பொருட்களை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீர், உணவு, உடைகள் மற்றும் மருந்துகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
பலரின் அனைத்து உடமைகளும் வெள்ள நீரில் அடித்துச் சென்றுள்ளமையால், மக்கள் நிர்க்கதியாகி உள்ளனர்.
மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ள நிலையில், கம்பளை பகுதியில் நீண்டகாலமாக வசித்து வந்த பலர் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களிடம் அரசாங்கம்
நாட்டை கட்டியெழுப்ப புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை நிவாரணங்களை சேகரிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் தானும் ஈடுபட்டுள்ளதாக ஐரி பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாத இறுதியில் பிரித்தானியா செல்லும் அவர், மக்களுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
