Home உலகம் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

0

ரஷ்யாவுடனான (Russia) போரில் உக்ரைன் (Ukraine) தோல்வியடைந்தால், மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகுமென அந்த நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் (America) உதவியின்றி உக்ரைனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றியடைய முடியாதென அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு நிதி உதவிகளை வழங்குவதில் இழுபறிகள் ஏற்பட்டுள்ள பின்னணியில், அமெரிக்காவின் நிதி உதவிகள் கிடைக்கப் பெறாத பட்சத்தில் உக்ரைன் தோல்வியை எதிர்நோக்க நேரிடுமென அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவி 

அமெரிக்க கொங்கிரஸால் நீண்ட நாட்களாக சில சட்டமூலங்கள் நிறைவேற்றப்படாதுள்ள நிலையில், வெளிநாட்டு நிதி உதவி சட்டமூலத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்!

இந்த சட்டமூலத்தில் இஸ்ரேலுக்கான (Israel) நிதி உதவிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக டெனிஸ் ஷ்மிஹால் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் உதவி உக்ரைனுக்கு தேவைப்படுவதாகவும், இந்த உதவி கிடைக்காத பட்சத்தில் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பாரிய தோல்வியை எதிர்நோக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப் போர்

அத்துடன், ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வியடைந்தால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென டெனிஸ் ஷ்மிஹால் எச்சரித்துள்ளார்.

மேலும், பல போருக்கு உக்ரைனின் தோல்வி வழிவகுக்குமெனவும் இதன் இறுதி மூன்றாம் உலகப் போராக கூட இருக்கலாமெனவும் உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வியை எதிர்நோக்கினால் ஏற்படும் அபாய நிலை குறித்து ஏற்கனவே பலர் எச்சரித்திருந்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/Y8Zw1KsISj0?start=46

NO COMMENTS

Exit mobile version