Home உலகம் நடுக்கடலில் பற்றி எரியும் உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பல் – ஆட்டம் காட்டும் ரஷ்யா

நடுக்கடலில் பற்றி எரியும் உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பல் – ஆட்டம் காட்டும் ரஷ்யா

0

உக்ரைன் (Ukraine) கடற்படையின் மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol) ட்ரோன் தாக்குதலில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் (Russian Defence Ministry) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்திற்கு அருகே உள்ள டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கடற்படைக்கு ஒரு முக்கியமான சொத்து

இந்நிலையில், கப்பல் தாக்கப்பட்டதை உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரைன் கடற்படை செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி கீவ் இன்டிபென்டன்ட் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான குழுவினர் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் காணாமல் போன பல மாலுமிகளைத் தேடும் பணி தொடர்கிறது என்று செய்தி தொடர்பாளர் கூறியதாக அது மேற்கோளிட்டுள்ளது.

மேலும், சிம்ஃபெரோபோல் கப்பல் 2021 இல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது உக்ரைன் கடற்படைக்கு ஒரு முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version