Home இலங்கை சமூகம் இலங்கை வந்த உக்ரேனிய யுவதிக்கு நேர்ந்த கதி

இலங்கை வந்த உக்ரேனிய யுவதிக்கு நேர்ந்த கதி

0

கொழும்பில் (Colombo) இருந்து பதுளை (Badulla) நோக்கி பயணித்த உடரட மெனிக்கே தொடருந்தில் இருந்து உக்ரேனிய யுவதியொருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒஹிய மற்றும் பட்டிப்பொல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்தில் மோதியதில் யுவதி தரையில் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துகள்

கொழும்பில் இருந்து எல்ல பிரதேசத்திற்கு செல்ல குடும்பத்துடன் வந்த 23 வயதுடைய உக்ரேனிய யுவதி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் உடரட மெனிக்கே தொடருந்தில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவரும் சுரங்கத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   

Source: https://ibctamil.com/article/ukrainian-girl-falls-from-train-1718472891

NO COMMENTS

Exit mobile version