இந்தோனேசியாவில் கைதான கெஹல் பத்தர பத்மே உட்பட பாதாள உலக குழுவினரை அழைத்துவரும் UL 365 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதனால் விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் குற்றவாளிகளாக நீதிமன்றதால் அறிவிக்கப்பட்ட ஐந்து பேர் நேற்று முன்தினம் இந்தோஷேியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொலிஸ் பேச்சாளர் ஹுட்லர் ஆகியோர் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றுள்ளதான தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று முடிந்த பின்னர் கொழும்பிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
