Home இலங்கை சமூகம் பிரித்தானிய நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!

பிரித்தானிய நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!

0

இலங்கையின் செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது, மோதலின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை வேதனையுடன் நினைவூட்டுகிறது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

செம்மணி தொடர்பான பொறுப்புக்கூறல்

இன்றைய காலகட்டத்தில் செம்மணி தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரை செய்வதற்கும் பிரித்தானியா என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று வெளியுறவுச் செயலாளரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பிரித்தானியா இதற்கான ஆதரவை எவ்வாறு வழங்க முடியும் என்பதை ஆராயும் நடவடிக்கையை, தான் மிகவும் வரவேற்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version