Home இலங்கை சமூகம் நல்லூர் கந்தனை தேங்காய் உடைத்து வழிபட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்!

நல்லூர் கந்தனை தேங்காய் உடைத்து வழிபட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்!

0

யாழ்ப்பாணத்திற்கான (Jaffna) விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம்(26) வருகை வந்த ஆணையாளர், செம்மணி அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளில் பங்கேற்றிருந்தார்.

அதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களினதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர், போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் மனித உரிமைகள் ஆணையரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அவரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

https://www.youtube.com/embed/c9BcM621cOU

NO COMMENTS

Exit mobile version