Home இலங்கை குற்றம் இலங்கையின் மிகவும் ஆபத்தான நபர் வெளிநாட்டில் அதிரடியாக கைது

இலங்கையின் மிகவும் ஆபத்தான நபர் வெளிநாட்டில் அதிரடியாக கைது

0

இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாக கருதப்படும் பாதாள உலக தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கெஹல்பத்தர பத்மே, மொமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாக மலேசிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய  பொலிஸார்

இது தொடர்பாக விசாரித்தபோது, ​​கெஹல்பத்தர பத்மே மற்றும் மூன்று பேரை மலேசிய பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பொலிஸார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

புதுக்கடை நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லா சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்டமையின் பிரதான சூத்திரதாரியாக கெஹல்பத்தர பத்மே செயற்பட்டதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version