Home இலங்கை சமூகம் திருகோணமலையில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

திருகோணமலையில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

0

திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (2) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்றுள்ளது.

போட்டி பரீட்சை நியமனம்

போட்டி பரீட்சை நியமனம் வழங்கக்கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச
நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பேச்சுவார்த்தை போதும் தொழிலை தா ,அரச சேவையில் கிழக்கு மாகாணத்தை
புறக்கணிப்பது ஏன், பரீட்சை வேண்டாம் தகுதிகாண் அடிப்படையில் வேலை வழங்கு
போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

NO COMMENTS

Exit mobile version