Home இலங்கை சமூகம் தீபாவளிப் பண்டிகைக்கு உலகலாவிய ரீதியில் கிடைத்துள்ள அங்கீகாரம்!

தீபாவளிப் பண்டிகைக்கு உலகலாவிய ரீதியில் கிடைத்துள்ள அங்கீகாரம்!

0

யுனெஸ்கோ தீபாவளிப் பண்டிகையை மனிதகுலத்தின் கலாசார பாரம்பரியத்தின்
பிரதிநிதித்துவப் பட்டியலில் நேற்றையதினம்(10) அதிகாரபூர்வமாகச் சேர்த்துள்ளது.

இந்தியாவின் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கியக்
கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

யுனெஸ்கோவின் பட்டியல் 

இந்த முடிவை யுனெஸ்கோ அறிவித்தபோது, அங்கு கூடியிருந்தவர்களால் ‘ஜெய் ஹிந்த்’,
‘வந்தே மாதரம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு
கொண்டாட்டம் களைகட்டியது.

பிரதமர் நரேந்திர மோடி , தீபாவளி யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில்
சேர்க்கப்பட்டதை வரவேற்று, இது தீபாவளியின் உலகளாவிய புகழுக்கு மேலும்
பங்களிக்கும் என எக்ஸ் சமூக வலைதளத்தில் (X) பதிவிட்டுள்ளார்.

இது இந்தியாவின் பதினாறாவது கலாசார அம்சமாக யுனெஸ்கோவின் பட்டியலில்
இடம்பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா
நடனம், யோகா மற்றும் வேத மந்திரங்களின் பாரம்பரியம் உள்ளிட்ட 15 அம்சங்கள்
இந்த மதிப்புமிக்க பட்டியலில் உள்ளன.

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான
குழுவின் 20ஆவது அமர்வை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

NO COMMENTS

Exit mobile version