Home இலங்கை சமூகம் நாட்டில் குறைவடைந்த மரக்கறி விலை : விவசாயிகள் குற்றச்சாட்டு

நாட்டில் குறைவடைந்த மரக்கறி விலை : விவசாயிகள் குற்றச்சாட்டு

0

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமையால் தாம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பூசணிக்காய் ஒரு கிலோகிராம் 35 ரூபா முதல் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

 விவசாய அமைச்சர் உறுதி  

இதனால் தமக்கு இலாபம் பெற முடியவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்தநிலையில், விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் அதற்காக கால அவகாசம் தருமாறும் விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version