Home இலங்கை சமூகம் காலி கோட்டையை பார்வையிட சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த கதி

காலி கோட்டையை பார்வையிட சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த கதி

0

காலி கோட்டை (Galle Fort) சுவரிலிருந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

குறித்த இளைஞன், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே கோட்டை சுவரிலிருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version