Home இலங்கை சமூகம் விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை தொழிற்சங்கத்தினர் மூடுகின்றனர் : மனுஷ நாணயக்கார

விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை தொழிற்சங்கத்தினர் மூடுகின்றனர் : மனுஷ நாணயக்கார

0

Courtesy: Ministry of Labour & foreign Emp

தமிழ் ஈழ விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை தொழிற்சங்கத்தினர் வாரத்தில் இரண்டு நாட்கள் மூடுகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (18) மத்துகம பொது விளையாட்டரங்கில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசியல் நலன்கள்

அங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,  இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் , முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு  அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.

இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர்.

தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.

பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மகிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நாட்டில் 10,000 பாடசாலைகளை மூடியதுதான் இவர்களின் செயற்திறமையாகும் .

இன்று நாங்கள் நிற, கட்சி வேறுபாடின்றி ஒரே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் அவ்வாறே இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியல் பற்றி சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளனர்.

பாரிய இணக்கப்பாடு

வீழ்ந்த நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முழு நாட்டு மக்களும் பாரிய இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். அன்றே அந்தக் கொள்கைகளை மாற்றிய பிறகு, கொரியா மீண்டும் IMF க்கு செல்லாத நாடாக முன் வந்தது.

இன்று இலங்கையும் அந்தப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. எங்களுக்கு கட்சி அரசியல், இனம், மதம், சாதி, நிறம் எதுவும் வேண்டாம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நாடு வந்துள்ளது ஆனால் இன்று இந்த மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்மைத் தியாகம் செய்து, சிரேஷ்ட அமைச்சர்கள் தமது அமைச்சுக்களைக் கூட தியாகம் செய்து, நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்த ஒரு பயணமாகும் 

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பன்னிரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்து வீழ்ந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு பாரிய பங்களிப்பை செய்தார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு பங்களிப்பு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 100,000 தொழில்முனைவோரை நாம் உருவாக்குவோம். அதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது .

அதாவது எமது நாட்டில் முதலீடு செய்ய கொரியா, ஜப்பான், இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் வந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version