Home இலங்கை சமூகம் தீர்வுகள் வழங்கப்படாவிடின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம்

தீர்வுகள் வழங்கப்படாவிடின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம்

0

Courtesy: Kanagasooriyan Kavitharan

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் (UTUJC) இணைத்தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த கூறுகையில்,

“நேற்று (2) அல்லது இன்று (3) ஆம் திகதிக்குள் தமது பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இணங்கியுள்னனர்.

விசேட கலந்துரையாடல்

மேலும், கலந்துரையாடலின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். 

 2017 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட எங்களின் மாதாந்த கொடுப்பனவை அவர்கள் வழங்கினால் மட்டுமே வேலை நிறுத்தப் போராட்டம் நிறுத்தப்படும்.

அதன்படி, இந்த விவகாரத்தை அமைச்சரவையின் முன் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கு உடனடித் தீர்வு காண்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

மேலும், உரிய தீர்வுகள் வழங்கப்படாவிடின் வேலைநிறுத்தப் போராட்டம் மேலும் தொடரும்” என பிரியந்த விளக்கமளித்துள்ளார்.

     

NO COMMENTS

Exit mobile version