Courtesy: Kanagasooriyan Kavitharan
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து அவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தை கைவிட முடிவு செய்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டன.
வேலைநிறுத்த போராட்டம்
17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 கூட்டு முதுகலை நிறுவனங்களைச் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் கிட்டத்தட்ட 70 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது நாட்டின் உயர்கல்வித் துறையை கடுமையாக சீர்குலைத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.